ஊர் நாட்டாண்மை தெய்வத்திரு நாரணப்ப நாயக்கர் அவர்கள் மற்றும் சம்பந்த வழி மைத்துனர்களான தெய்வத்திரு சின்ன வெங்கிடசாமி நாயக்கர், தெய்வத்திரு குப்புசாமி நாயக்கர் மற்றும் ஊர் பெரியோர்களான நாணவ நாயக்கர், அழகர்சாமி நாயக்கர், சுந்தரம் பிள்ளை, கண்ணாடி ரங்கசாமி நாயக்கர், து.வேலப்ப நாயக்கர் மேலும் ஊர் பெரியோர்கள் ஒன்று சேர்ந்து கம்மவார் சமூதாயத்திற்கு பெருமாள் கோவில் வேண்டும் என்றும் அதனை கட்டுவதற்கான தேவைகளை ஆராய்ந்தனர்.
ஊர் நாட்டாண்மை தெய்வத்திரு நாரணப்ப நாயக்கர் வேண்டுகோளுக்கிணங்க தெய்வத்திரு சின்ன வெங்கிடசாமி நாயக்கர் தற்போது வீடு கட்டிக்கொண்டு இருந்த பொருட்களில் கோவில் கட்ட தேவைப்பட்ட ஒரு கம்பத்துணை கம்மவார் சமூதாய பொது இடத்திற்கு கொண்டு சேர்த்தார் மற்றும் மூன்று பக்கமும் செங்கல் சுவர் வைத்து காரை சுண்ணாம்பினால் மூன்று பக்கமும் பூசி சுவர்களை சரி செய்து மேலே தகரக்கூரை அமைத்து முன்பக்கம் மர ரீப்பர் தட்டிக்கதவுகள் அமைத்தார். மேலும் கிழக்கு பக்கம் இரண்டு கல் தூண்கள் ஊன்றி கோவிலுக்கு ஆலயமணி ஒன்று தெய்வத்திரு குப்புசாமி நாயக்கர் அவர்கள் உபயம் செய்தார்.
பின்னர் ஊர் நாட்டாண்மை தெய்வத்திரு நாரணப்ப நாயக்கர் மற்றும் தெய்வத்திரு சின்ன வெங்கிடசாமி நாயக்கர் தலைமையில் ஊர் பெரியோர்கள் ஊருக்குள் மேற்கு பக்கம் கன்னி மூலையில் வேநாமங்கள், யாகங்கள் செய்து பல திருத்தலங்களிலிருந்து முக்கிய தீர்த்தங்கள் வரவழைத்து அந்த கம்பத்தூணை ஸ்ரீ வரதராஜ பெருமாள் என்று பெயர் சூட்டினார்கள் பின்னர் கம்மவார் இனத்தினர் ஸ்ரீ வரதராஜ பெருமாளை போற்றி வணங்கி வந்தனர்.
இந்த கோவிலின் தர்மகர்த்தாவாக தெய்வத்திரு நாரணப்ப நாயக்கர் அவர்கள், அவர்களின் சம்பந்த வழி மைத்துனரான தெய்வத்திரு சின்ன வெங்கிடசாமி நாயக்கர் அவர்களை ஊர் நாட்டாண்மையாக நியமித்தார். மேலும் கோவில் முதல் மரியாதையும் இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.
கிராம ஒற்றுமைகாக கிராமத்தில் பெருமாள் கோவில் விஷேச வரி வசூல் செய்து மேலும் தெய்வத்திரு சின்ன வெங்கிடசாமி நாயக்கர் தனது சொந்த பணத்தில் திருவிழாக்களை நடத்தி வந்தார். ஓவ்வொரு ஆண்டும் சித்ரா பெளர்ணமி, புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை மற்றும் மார்கழி மாதம் வைகுண்டஏகாதேசிக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார்.
ஸ்ரீ வரதராஜ பெருமாள் வீதி உலா வரும் போது பஜனை பாடும் அன்பர்கள் தங்களின் பக்தி பாடல்களை பாடி இறைவனை வேண்டுவார்கள்.
தெய்வத்திரு சின்ன வெங்கிடசாமி நாயக்கர் தனது சொந்த செலவில் பஜனை பாடும் அன்பர்களுக்கு மிருதங்கம், வீணை, ஹார்மோனியம், தாளம், தவில் மற்றும் இதர இசை வாத்தியங்களை வழங்கி ஊக்குவித்துள்ளார்.
கோவிலின் தர்மகர்த்தாவான நாரணப்ப நாயக்கர் அவர்களும் அவரது புதல்வன் சீனிவாச நாயக்கர் அவர்களும் மற்றும் சின்ன வெங்கிடசாமி நாயக்கர் அவர்களும் ஊர் பெரியோர்களான கிருஷ்ணசாமி நாயக்கரின் மக்கள், குப்புசாமி நாயக்கரின் மக்கள், நாணவ நாயக்கரின் மக்கள், அய்யாலுசாமி நாயக்கர், பெத்தி நாயக்கர், பம்பையா நாயக்கர் என்ற நாராயணசாமி அடியார் ஆகியோரை அழைத்து தற்போதுள்ள சிறிய பெருமாள் கோவிலினை விட்டு சுமார் 60 கிஜம் இடைவெளி விட்டு பெரியதாக பெருமாள் கோவில் கட்டவும் அதற்கு அனைவரும் தர்மகர்த்தாவின் முடிவினை ஏற்று தாங்கள் என்ன செய்தாலும் சரி என்று கூறினார்கள்.
முதலில் கோவிலை சுற்றி மூன்று பக்கமும் திருமதில்கள் கட்டப்பட்டது. மூலஸ்தனம் நடுமண்டபம் எல்லாவற்றையும் கட்டப்பட்டது. மூலஸ்தனத்தின் மேலே கோபுரம் விமானம், கும்ப விலாசம, கும்ப கலசம், ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிலை, பெரியாழ்வார்கள் சிலை, இளையாழ்வார்கள் சிலை, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளை சின்ன வெங்கிடசாமி நாயக்கர் அவர்களால் அமைக்கப்பட்டதால் சிலைகள் எல்லாவற்றிலும் சின்ன வெங்கிடசாமி நாயக்கர் அவர்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
கோபுர சிற்பங்கள் அனைத்தும் திறமைவாய்ந்த கொத்தனார்களை கொண்டு அழகாக அமைக்கப்பட்டு இருந்தது. மற்றும் இந்த சிலைகள் அனைத்தும் ம.குப்புசாமி நாயக்கர் அவர்களின் கிணற்றில் 40 நாட்கள் ஒரு மண்டலம் ஜலஸ்தானம் செய்யப்பட்டது பின்னர் தர்மகர்த்தாவான சின்ன வெங்கிடசாமி நாயக்கர் அவர்களின் நெல் களஞ்சியத்தில் 40 நாட்கள் ஒரு மண்டலம் வைத்து பின்னர் கோவிலுக்கு எடுத்து சென்று ஓம குண்டங்கள் யாக சாலை அமைத்து புண்ணிய நதி தீர்த்தங்கள் வரவழைத்து ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் முக்கிய பட்டர்களை அழைத்து ஹோமங்கள் செய்து பிராட்டியர் பெருமாள் அமரும் பீடத்தில் விஷ்ணு சக்கரம் பதித்து கும்பாபிஷேகங்கள் நடத்தி ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து நிறுவினார்கள்.
பின்னர் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழாக்களும் பஜனைகளும் சீறும் சிறப்புமாக நடந்து கொண்டிருக்கும் காலத்தில் திடீர்ரென சின்ன வெங்கிடசாமி நாயக்கர் அவர்கள் மரணம் அடைந்த பின் கோவிலின் தர்மகர்த்தாவாக N.S.இளையாழ்வார் அவர்களை நியமித்தனர். ஊருக்கு மேற்கே கோவிலை கட்டி பாழடைந்த நிலையில் கோபுர சிற்பங்கள் நிலை கெட்டு இருப்பதையும் பெருமாளுக்கு கைகரியம் பூஜை இல்லாமல் இருப்பதும் இக்கிராமத்திற்கு முன்னேற்றம் இல்லாதது போல் தோன்றியது அதன் பின் கோவிலின் தர்மகர்த்தாவான N.S.இளையாழ்வார் நாயக்கர் அவர்கள் மற்றும் கு.கொண்டுசாமி நாயக்கர் அவர்களும் மற்றும் ஊர் பெரியோர்களும் சேர்ந்து வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 2 மணி நேரம் பஜனை ஏற்பாடு செய்து பிரசாதம் வழங்கினார்கள் அப்போது கொஞ்சம் கொஞ்சமாக இக்கிராமத்திற்கு முன்னேற்றம் தெரிந்தது.
பின்னர் ஊர் நாட்டாண்மையும் கோவிலின் தர்மகர்த்தாவுமான உயர்திரு N.S.இளையாழ்வார் அவர்களும் மற்றும் ஊர் பெரியோர்களாக கு.கொண்டுசாமி நாயக்கர், T.பெரியாழ்வார் நாயக்கர், A.K.சீனிவாச நாயக்கர். R.கரியமால், P.V.R மக்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் அனைவரும் தெய்வத்திரு குப்புசாமி நாயக்கரின் புதல்வன் உயர்திரு ஆடிட்டர் K.ராமானுஜம் மற்றும் R.சாராதாதேவி அவர்களை சந்தித்து கோவிலின் நிலைமையை எடுத்துக்கூறி கோவிலுக்கு மண்டபம் அமைக்கவும் மற்றும் நாள்தோறும் நடைபெறும் வழ்பாடுகளுக்கும் உதவுமாறும் கேட்டுக்கொண்டனர். பெரியோர்கள் கேட்டுக்கொண்ட படியால் உயர்திரு ஆடிட்டர் K.ராமானுஜம் அவர்கள் ராஜகோபுரம் அனைத்தையும் புதிதாக வர்ணம் தீட்டி முன் மண்டபத்தின் கீழ் பஜனை ஹால் அமைத்துள்ளார் மேலும் கோவிலுக்கு முன்பு மண்டபம் அமைத்தும் மற்றும் கடந்த பல ஆண்டுகளாக கோவிலிற்கு தேவையான பல உதவிகளை சிறப்பான முறையில் செய்து கொண்டுள்ளார் என்பதும் கு.கொண்டுசாமி நாயக்கர் அவர்கள் ஐராவதி மண்டபம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளடைவில் பஜனை மண்டபத்தில் ஆடிட்டர் சீனிவாசன் அவர்கள் கொடிகம்பம் அமைத்துள்ளார். ஈசான்ய மூலையில் நவக்கிரக மேடை பிரதிஷ்டை P.ஐயப்பராஜ் அவர்கள் உபயம் செய்துள்ளார். T.பெரியாழ்வார் நாயக்கர் அவர்கள் மூலஸ்தனத்தின் இடது பக்கத்தில் விஷ்ணு துர்க்கா மண்டபம் மற்றும் ஆஞ்சநேயர் மண்டபம் அமைத்துள்ளார். கி.சீனிவாச நாயக்கர் அவர்கள் துர்க்கா மண்டபத்தின் வடக்குப்பக்கம் தீர்த்த தொட்டி அமைத்துள்ளார். கு.கொண்டுசாமி நாயக்கர் அவர்கள் கருட வாகனம் உபயம் செய்துள்ளார். பெருமாள்சாமி நாயக்கர் அவர்கள் அவருடைய மனைவியின் நினைவாக கருட வாகனம் ஊர் வலம் வருவதற்கு 4 சக்கரம் அமைத்த ஸ்டீல் வண்டியை உபயம் செய்துள்ளார்.
A.K.சீனிவாச நாயக்கர் அவர்கள் மேள வாத்திய டமாரம் இசை ஒன்று உபயம் அளித்துள்ளார். கல் மண்டபத்தின் முன் கேட் குருசாமி ஆசிரியர் சங்கரம்மாள் என்ற பெயரில் உபயம் அளித்துள்ளார்கள், முன் பக்கம் உள்ள இரும்பு கேட் வெ.ஆழ்வார்சாமி ஆசிரியர் அவர்கள் உபயம் அளித்துள்ளார். உட்சவ காலத்தில் ஸ்ரீதேவி பூதேவி உலா வர 1 பவுன் நெக்லஸ ஒன்று முருகானந்தம் இஞினியர் அவர்கள் அன்பளிப்பு அளித்துள்ளார். சிங்கப்பூர் ஆடிட்டர் அனந்தராம் அவர்கள் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருநாமங்கள் அன்பளிப்பு அளித்துள்ளார். கோவிலின் மாத பராமரிப்புக்காக சிங்கப்பூர் ஆடிட்டர் திரு ராமானுஜம் அவர்கள் உதவி செய்து கொண்டு இருக்கிறார்.
ஸ்ரீ வரதராஜ பெருமாள் மண்டபம் மூலம் பல ஏழை எளிய கம்மவார் சமூதாய மக்கள் தங்கள் குடும்பத்தாரின் திருமணங்களை நடத்தி பலன் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.